close
Choose your channels

வனிதாவுக்கு தாலி கட்டிய பவர்ஸ்டார் சீனிவாசன்: வைரல் புகைப்படம்!

Friday, July 23, 2021 • தமிழ் Comments

நடிகை வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது அவருக்கு நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தாலிகட்டிய புகைப்படம் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதா ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார் என்றும் அதன் பின்னர் மூன்றாவது முறையாக பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் வனிதா - பீட்டர் பால் ஒருசில மாதங்களிலேயே பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வனிதாவுக்கு இன்னொரு திருமணத்தின் ராசி இருப்பதாக சமீபத்தில் குருஜி என்ற ஜோதிடர் பேட்டி கொடுத்த நிலையில் நடிக்ர் பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில் சற்று முன்னர் வனிதாவுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz