முதல்ல இதை நிறுத்து: யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!

சமீபத்தில் நடந்த கார் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தும், தனது உயிர் தோழி பவானி பலியானது குறித்தும் மிகவும் உருக்கமாக அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாஷிகாவின் இந்த பதிவுக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் ஒருசில ஆறுதல் கமெண்ட்ஸ்களும் பதிவான நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், இந்த பதிவுக்கு ’முதலில் இதை நிறுத்தவும்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியபோது ’விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். அதனால்தான் அதற்கு விப்த்து என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை ஒருவரும் மாற்ற முடியாது. மேலும் நீ பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கின்றாய். முதலில் உன்னை நீயே திட்டிக் கொள்வதை நிறுத்திக்கொள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த கோரமான விபத்தில் இருந்து நீ தப்பியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடவுள் கண்டிப்பாக உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

தனது தோழியின் மறைவுக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து வரும் யாஷிகாவுக்கு வனிதாவின் இந்த பதிவு நிச்சயம் ஆறுதலாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவிக்கு கொடுமை...பெண்களுடன் கள்ளத்தொடர்பு....! பிரபல பாடகர் மீது பாய்ந்த வழக்கு...!

பிரபல பாடகரான யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி போலீசாரிடத்தில் புகாரளித்துள்ளார்.

தனுஷின் 'D44' படத்தில் இணைந்த பிரபல நடிகை: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

பொன்னியின் செல்வன் லுக்கில் அசத்தும் நடிகர்கள்....! இணையத்தையே அலறவிடும் புகைப்படங்கள்...!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும், காதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றன.

குளிர்பானம் குடித்த 13 வயது சிறுமி உயிரிழப்பு… பதைக்க வைக்கும் தகவல்!

சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் வசித்த 13 வயது சிறுமி ஒருவர் மளிகை கடையில் இருந்து

போட்டிக்கு நடுவே தடுக்கி விழுந்தும், தங்கம் வென்ற தங்கமங்கை… குவியும் வாழ்த்து!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.