close
Choose your channels

வனிதாவின் அடுத்த ஜோடி இவர்தான்: டுவிட்டரில் அறிவிப்பு!

Friday, April 9, 2021 • தமிழ் Comments

என்னுடைய அடுத்த ஜோடி இவர் தான் என நடிகை வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த், சிம்ரன் நடிக்கும் ’அந்தகன்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அவர் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வனிதா தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து வனிதா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அந்தாதூன்’ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியாஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்தப் படத்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே.
 

Get Breaking News Alerts From IndiaGlitz