'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் வனிதா.. உறுதி செய்த புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 04 2024]

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் தனது மகள் ஜோவிகா கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் நான் கலந்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற நிலையில் அவர் மீண்டும் எப்படி கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, குரேஷி, சுனிதா, புகழ், ராமர் ஆகியோர் கோமாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சில புரமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது மற்றொரு புரமோ வீடியோ படமாக்கப்பட்டதாகவும் அதில் தான் வனிதா விஜயகுமார் தோன்றியுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்த வீடியோவை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் கலந்து கொள்வதை தான் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

More News

த்ரிஷா மட்டுமல்ல.. மேலும் சில கேமியோ கேரக்டர்கள்.. 'கோட்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ்..!

கடந்த சில வருடங்களாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் சில பிரபலங்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த வாரம் ஒரே  ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் ஒரு சூப்பர் ஹீரோ படம் இருக்குது: ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உள்பட தென்னிந்திய படங்களும் ஹிந்தி படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ்

அருண் விஜய் அடுத்த படம்.. 2 நாயகிகள், சிக்ஸ்பேக்கில் அதிரடி ஆக்சன்.. இயக்குனர் இவரா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடித்த 'வணங்கான்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்

கிரிக்கெட் வீரர் பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் நடிகர் அஜித் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

'சியான் 62' படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'சியான் 62' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரபூர்வ