முத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணமும் சர்ச்சையாகி பீட்டர்பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார் என்பதும் அதற்கு அவ்வப்போது வனிதா பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வனிதா-பீட்டர் பால் திருமணத்தன்று வனிதாவின் உதட்டில் பீட்டர் பால் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முன் முத்தம் கொடுப்பது குறித்து ஒரு சிலர் சமூக வளைதளத்தில் குற்றஞ்சாட்டி வந்தாலும், வனிதா இதற்கும் பதிலடி பதில்களை தெரிவித்து வந்தார்

இந்த நிலையில் தற்போது வனிதாவின் நெற்றியில் பீட்டர் பால் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’ என குறிப்பிட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு

உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிக்-டாக் நிறுவனத்துக்கு விழுந்த பலத்த அடி!!! புள்ளி விவரங்களை வெளியிட்ட சீன ஊடகம்!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்-டாக், ஹாலே ஆப் முதற்கொண்டு 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

பாஜகவில் பதவி பெற்ற நான்கு தமிழ் நடிகைகள்!

அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு இடையே பாஜக தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள கடும் முயற்சியில் உள்ளது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க அக்கட்சியின்

ரேப் செய்தால் மரண தண்டனை: உடனே சட்டம் இயற்றுங்கள்: பிரபல நடிகை ஆவேசம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு என்ற பகுதியில் ரவுடிகள் காவல் துறையினர் மீது நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலால் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார்