முத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்

கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்தின் போது மோதிரம் மாற்றிய பின்னர், இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்தில் இது சகஜம்தான் என்றாலும் குழந்தைகள் முன் வனிதா கொடுத்த லிப்கிஸ் சமூக வலைத்தளத்தில் விவாதத்திற்குரியதாக மாறியது.

இந்த நிலையில் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு முத்தம் குறித்து ஒரு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: பெற்றோர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு எச்சரிக்கை: உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம். இந்த கார்ட்டூன் படங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அதில் வயது வந்தோருக்கான காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அல்லது அவர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் முத்தமிடுகிறார்கள் என்பதை குழந்தைகள் ஒருபோதும் தெரிந்து கொள்ள கூடாது என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் முன் திருமணம் செய்து கொண்டு, கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த வனிதா, இந்த கருத்தை கூறுவதற்கு தகுதியற்றவர் என்ற ரீதியில் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

இளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்!!!

ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இணைந்து பணியாற்ற இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.

திடீரென மருத்துவ விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர்: என்ன காரணம்?

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக

அமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

கொரோனாவே இன்னும் போகல... அதுக்குள்ள இன்னொரு பெருந்தொற்றா??? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

சீனாவின்  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது.

சாத்தான்குளம் வழக்கு: மதுரை ஐகோர்ட்டின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளால் பரபரப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள்