திருமணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் மீது புகார் அளித்த வனிதா!

தன்னைப் பற்றியும் தனது திருமணம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்தத் திருமணம் குறித்து பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வந்ததும் அதற்கு வனிதா பதிலடி கொடுத்து வந்தது தெரிந்ததே. மேலும் வனிதா திருமணம் குறித்து திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சமூக வளைதளத்தில் புகழ்பெற்ற ஒரு பெண், வனிதா திருமணம் குறித்து ஆவேசமாக தெரிவிக்கும் கருத்துக்களை கொண்ட வீடியோக்கள் வைரலாகிறது. இதனை அடுத்து அந்தப் பெண் மீது தற்போது வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் பெண்தான் தனது திருமணம் குறித்தும் தன்னைப் பற்றியும் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் வனிதா குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

வனிதா புகார் அளித்த பெண் ஏற்கனவே முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை குறித்து அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டவர் என்பதையும் விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

??

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Jul 6, 2020 at 10:01pm PDT

More News

தேறிவரும் சென்னை, மோசமாகும் மற்ற மாவட்டங்கள்: தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ள நிலையில்

என் டுவிட்டர் அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது ஏன்? பிரபல நடிகை ஆவேசம்

பிரபல நடிகை ஒருவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்தது ஏன் என ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடக் கொடுமையே இதுவும் போச்சா??? கொரோனா விஷயத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட விஞ்ஞானிகள்!!!

பொதுவாக வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அந்நோயில் இருந்து மீண்டவரது உடலில் நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருக்கும்.

மும்பை, டெல்லி போல் செயல்படுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

அரசின் காலதாமதத்தால் பாதிக்கப்படப்போவது மக்களின் உயிர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி

ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.