close
Choose your channels

அர்ச்சனா வெளியே, வனிதா உள்ளே: ஜீடிவியின் முக்கிய சீரியலில் வனிதா!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த டிவியில் இருந்து வெளியேறினார் என்பதும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமார், விஜய் டிவி, சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் போன்ற பணிகளில் இருந்த நிலையில் தற்போது அவர் ஜீ டிவியில் முக்கிய சீரியலில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 80களில் கமல் ரஜினியுடன் நடித்த நடிகை அம்பிகா நடித்து வரும் சீரியல் ’திருமதி ஹிட்லர்’. இந்த சீரியலில் தற்போது முக்கிய கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அம்பிகாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஜீடிவியில் இருந்து அர்ச்சனா வெளியேறி விஜய் டிவிக்கு சென்று இருக்கும் நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் இருந்து ஜிடிவிக்கு வந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மட்டும் என்றும் ’அனல் காற்று’ என்ற திரைப்படத்திலும் வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.