கதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த வனிதா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வின்னர் ஆன வனிதாவுக்கு தொடர்ந்து தொலைக்காட்சியில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி சிம்ஹா நடித்த ’பாம்பு சட்டை’ என்ற படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வனிதா நாயகியாகவும், முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக வனிதா தனது உடல் எடையை குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகிய வனிதா விஜயகுமார் தற்போது 25 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் அதிமுக “வெற்றி நடைபோடும் தமிழகம்” எனும் பெயரில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்!

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 50,422 சதுர அடியில் 80 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் வெற்றி பெற்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா?

சென்னையில் இங்கிலாந்துக்கு இடையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 2 டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற இருக்கிறது

பெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சனம் செய்து இருந்தார்.