டெலிவரி தேதியை அறிவித்த வனிதா விஜயகுமார்.. கர்ப்பமான புகைப்படம் வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை வனிதா விஜயகுமார், ’மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து, நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை டெலிவரி தேதி என அறிவித்து வெளியிட்ட போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ’மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்து, அப்போது டெலிவரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த போஸ்டரில் வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சி மற்றும் அவரது கர்ப்பிணி வயிற்றை ராபர்ட் முத்தமிடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது, இது அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமான், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments