close
Choose your channels

'வஞ்சகர் உலகம்' இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!  

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மனோஜ் பிதா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரு சோமசுந்தரம், பிக்பாஸ் சிபி, சாந்தினி தமிழரசன் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’வஞ்சகர் உலகம்’. இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும், இந்த படத்தை பார்த்தது தான் நடிகர் சிபி சக்கரவர்த்திக்கு தனது ’மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் லோகேஷ் வாய்ப்பு கொடுத்தார் என சமீபத்தில் சிபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வஞ்சகர் உலகம்’ இயக்குனர் மனோஜ் பிதா அடுத்ததாக சந்தானம் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ’ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், இந்த படத்திற்கு சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.