close
Choose your channels

அரசு உயரதிகாரியாக மாறிய நடிகை வரலட்சுமி

Saturday, November 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை வரலட்சுமி நடித்துள்ள மாரி 2' படத்தில் அவருடைய கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வரலட்சுமியின் கேரக்டர் பெயருடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி வரலட்சுமி, 'விஜயா' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் சட்டத்துறை மற்றும் நீதித்துறை இணை செயலாளர் என்ற அரசு உயரதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி சமீபத்தில் வெளியான 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களில் நெகட்டிவ் வேடத்தில் நடித்த நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்கு இடமளிக்காத வகையில் பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.