close
Choose your channels

ஒரே படத்தில் இணையும் இரண்டு பிரபல நடிகைகள்

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரே படத்தில் இரண்டு பிரபல நடிகைகள் இணைந்து நடிப்பது அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்தான் என்ற வகையில் தற்போது அதே போல் இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். கன்னிராசி, வெல்வெட் நகரம், காட்டேரி, பாம்பன், சேஸிங், டேனி, உள்பட ஏற்கனவே சுமார் அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் வரலட்சுமி தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்கு கலர்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகை இனியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

பிரபல மலையாள இசை அமைப்பாளர் எஸ்பி வெங்கடேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகிற்கு ரிஎண்ட்ரி ஆகிறார். இவர் ஏற்கனவே கடந்த 1988 முதல் 2010ஆம் ஆண்டு வரை பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.