இரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றன. திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைத்து தரப்பினரும் பொதுமக்களுக்கு இதனை வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்களில் சிலரும் சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடியும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை ஒரு சில போலீசார் கடுமையாக அடித்து நொறுக்கி வருகின்றனர். இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து பொதுமக்களின் ஒருவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியபோது, ‘இரண்டு பக்கமும் தவறு இருக்கின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வருவது ஒரு கிரிமினல் குற்றம் அல்ல. அவ்வாறு வருபவர்களை போலீசார் அடிப்பது தவறான ஒன்று. ஆனால் அதேநேரத்தில் இந்த விதமான டென்ஷனை ஏற்படுத்தாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இரண்டு பக்கமும் தவறு இருப்பதாக கூறியிருக்கும் வரலட்சுமியின் என்ற கருத்து தற்போது வைரலாகி வருகிறது.