close
Choose your channels

'அரபிக்குத்து' பாடலுக்கு வரலட்சுமி யாருடன் டான்ஸ் ஆடுகிறார் பாருங்கள்: வீடியோ வைரல்

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’பாடல் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த ஐந்து நாட்களில் இந்த பாடலுக்கு நடனம் ஆடாத பிரபல நடிகைகளே இல்லை என்று கூறலாம்.

சமந்தா உள்பட பல திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

அந்த வகையில் விஜய்யுடன் ’சர்கார்’ திரை படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியுடன் ’அரபிக்குத்து’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த வீடியோவை லைக் செய்தவர்களில் ராதிகா சரத்குமாரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos