உதயநிதியை சந்தித்து 2 டன் உணவு கொடுத்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Thursday,June 03 2021]

நடிகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதியை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் இரண்டு டன் உணவுப் பொருள்களை வழங்கி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அதுமட்டுமின்றி பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் விலங்குகளின் ஆர்வலர் என்பதும் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் விலங்குகளுக்கு முடிந்த அளவு அனைவரும் உணவுகள் வழங்க வேண்டும் என்றும் சமூக வலைதளம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் நடத்திவரும் சேவ்சக்தி பவுண்டேஷன் மூலம் விலங்குகளுக்காக 2 டன் உணவுகளை நடிகை வரலட்சுமி, உதயநிதி எம்.எல்.ஏவை சந்தித்து வழங்கியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது வரலட்சுமியின் தாயாரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

இது குறித்து வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பதாவது: சேவ் சக்தி அமைப்பின் மூலம் நாங்கள் கொடுத்த இரண்டு டன் உணவுப்பொருட்களை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மூலம் இந்த உணவு பொருட்கள் விலங்குகளுக்கு செல்லும் என்றும் இதற்காக தான் மிகுந்த பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்