'தாரை தப்பட்டை' டப்பிங் பணியில் வரலட்சுமி

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது முழுவேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் இந்த படத்திற்காக டப்பிங் செய்துள்ளார்.

இந்த தகவலை வரலட்சுமி புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பாலா இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட இறுதியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை விஜய் நடித்த 'கத்தி' படத்தை இயக்கிய 'லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிறுவனம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தை தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் இசைஞானி இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளதால், விரைவில் அவருக்கு கெளரவம் செய்யும் வகையில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்த இயக்குனர் பாலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகுமார், வரலட்சுமி, சதீஷ் கெளசிக், பிரகதி குருபிரசாத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு செழியன் ஒளிப்பதிவாளராகவும், மறைந்த கிஷோர் அவர்கள் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர். பாலாவின் 'பி' ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

முடிவுக்கு வந்தது சூர்யாவின் '24'

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்த 'பசங்க 2' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில்...

இன்று நள்ளிரவில் 'வேதாளம்' டீசர் - மதன்கார்க்கி தகவல்

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம்....

விஜய் உள்பட 'புலி' படக்குழுவினர் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை

இளையதலைமுறை விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் விஜய், இயக்குனர் சிம்புதேவன், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.....

'புலி' படக்குழுவினர் கூறிய புதிய ரகசியங்கள்

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்த 'புலி' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை வெளியான 'புலி' படத்தின் தகவல்களை கொஞ்சம் வரிசைப்படுத்தி பார்ப்போம்....

'புலி' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தான் இயக்கிய 'தாகபூமி' என்ற குறும்படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும்...