ரேப் செய்தால் மரண தண்டனை: உடனே சட்டம் இயற்றுங்கள்: பிரபல நடிகை ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்ரியா என்பவரை 3 காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அடித்தே கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு இந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து நேற்று அறிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழகம் இந்த சட்டத்தை இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், ரேப் செய்தால் உடனடியாக மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த சட்டம் இயற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று அவரை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். வரலட்சுமியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு என்ற பகுதியில் ரவுடிகள் காவல் துறையினர் மீது நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலால் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார்

இன்று முதல் போரை தொடங்குகிறது மக்கள் நீதி மய்யம்: கமல் அறிவிப்பு

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது பல டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார்

லடாக்கில் திடீர் விசிட்: கெத்து காட்டிய பிரதமர் மோடி

இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கொரோனா வைரஸை தடுக்க முகக்கவசம் போல இதுவும் ரொம்ப முக்கியம்!!! FDA வின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படி பரவும்? பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

அதிபர் ட்ரம்புக்கு டஃப் கொடுக்கும் ஜோ பிடன்!!! அமெரிக்க அரசியலில் தொடரும் பரபரப்பு!!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.