close
Choose your channels

வரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் அதன்பின்னர் பல தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்தார்.

இருப்பினும் வரலட்சுமி தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் ஒரு படமான ’கிராக்’ என்ற படம் தற்போது தயாரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரலட்சுமி நடிக்கவிருக்கும் மூன்றாவது தெலுங்கு படம் குறித்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்து உள்ள படம் ஒன்றை இயக்குனர் விஜய் கனகமெடல என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் பூஜை வரும் 20ஆம் தேதி ஐதரபாத்தில் நடைபெறவிருப்பதாகவும், இந்த படக்குழுவினர்களுடன் இணைவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.