'லவ் டுடே' படம் போலவே 'வரலாறு முக்கியம்' படம்: நடிகர் ஜீவா

  • IndiaGlitz, [Sunday,December 04 2022]

'லவ் டுடே' படம் போலவே 'வரலாறு முக்கியம்' படமும் நகைச்சுவையாக இருக்கும் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்

நடிகர் ஜீவா நடித்துள்ள 'வரலாறு முக்கியம்' என்ற திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் 'வரலாறு முக்கியம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 'பேசிய நடிகர் ஜீவா, 'தமிழ் ரசிகர்கள் நல்ல படத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'லவ் டுடே' படம். 'லவ் டுடே' படத்தை போலவே இந்த 'வரலாறு முக்கியம்' படமும் நகைச்சுவை கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

மேலும் 'சிவா மனசுல சக்தி போன்ற ஒரு ஜாலியான படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்ட நிலையில்தான் 'வரலாறு முக்கியம்' படத்தின் கதையை கேட்டேன். சிவா மனசுல சக்தி படம் போற்றும் இந்த படம் இருக்கும். இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவா ஜோடியாக காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் நடித்திருக்க மேலும் கேஎஸ் ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

More News

'கேப்டன் மில்லர்' படத்தில் என்ன கேரக்டர்? சிவராஜ்குமார் கூறிய ஆச்சரிய தகவல்!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா

'தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி.. விஜய்க்காக சிம்பு பாடிய மாஸ் பாடல்

 தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய சீரியல் நடிகையின் புதிய கார்.. வீடியோ வைரல்

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய சன் டிவி சீரியல் நடிகை புது கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

'பயங்கரமான மேட்டரா இருக்கே'... கமல்ஹாசனே வியக்கும் அளவுக்கு விக்ரமன் சொன்ன விஷயம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 56வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஜனனி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய 3 வீரர்களுக்கும் 3 பெட்டிகள் மற்றும் 3 சாவிகள் கொடுத்ததை பார்த்தோம்

'வீட்டில் இருந்து தான் புரட்சி தொடங்குகிறது': கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் டைட்டில்!

 கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படத்தை 'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.