வதந்திகளை தவிடுபொடியாக்கிய விஷால்-வரலட்சுமி

  • IndiaGlitz, [Monday,May 29 2017]

விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற படம் 'சண்டக்கோழி'. இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும், அவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஷால், வரலட்சுமி ஆகியோர் இணைந்து 'மதகஜ ராஜா' என்ற படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் ஒருசில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில வருடங்களாக விஷால், வரலட்சுமி காதலித்து வந்ததாகவும், பின்னர் திடீரென இருவருக்கும் இடையே பிரேக்-அப் ஏற்பட்டதாகவும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்து அனைத்து வதந்திகளையும் தவிடுபொடியாக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

More News

எனக்கு கோவில் கட்டுங்கன்னு சாமி சொன்னதில்லை, அதுபோல தான் அஜித்தும்: ஆர்.கே.சுரேஷ்

பிரபல தயாரிப்பாளரும், இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றவருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது ஏழு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் 'பில்லா பாண்டி'...

விஜய்யிடம் எனக்கு பிடித்தது இதுதான். நித்யாமேனன்

இளையதளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராகிய நித்யாமேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பெருமையாக கூறினார்....

வேட்பாளர் பட்டியலை அடுத்து தொகுதியை (டைட்டில்) அறிவித்தார் வெங்கட்பிரபு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் வேட்பாளர் பட்டியல் போன்று கடந்த மூன்று நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும்போதே, இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும் என்று அனைவராலும் ஊகிக்கப்பட்டது...

ரஜினியின் 'காலா' படத்தில் இணைந்த நட்சத்திர பட்டாளங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷின் தயாரிப்பில் உருவாகும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களை வொண்டர்பார் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது...

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...