'வாரிசை அடுத்து மாஸ் தமிழ் நடிகரின் படத்தை தயாரிக்கும் தில் ராஜூ.. செம அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,December 27 2022]

தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு முதல்முறையாக தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களை அதிகம் தயாரிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ்த் திரையுலகின் இன்னொரு மாஸ் நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தை பிரபல தெலுங்கு தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் நடித்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக தமிழுக்கு வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷிவினுக்கு புரமோஷன் செய்ய சம்பளம் கொடுக்கப்படுகிறதா? உளறி கொட்டிய நண்பர்!

 பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியே உள்ளவர்கள் புரமோஷன் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு

லட்சுமி மேனன் இவ்வளவு ஸ்லிம்மாக மாறிவிட்டாரா?  லேட்டஸ் புகைப்படங்கள் வைரல்!

 நடிகை லட்சுமிமேனன் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து குண்டாக இருந்த நிலையில் தற்போது அவர் ஸ்லிம்மாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஷிவினுக்கு ரோஸ் கொடுக்கும் யோகி.. மைனாவின் ரியாக்சன்!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிலையில் முதல் கட்டமாக மைனா நந்தினியின் கணவர் யோகி மற்றும் குழந்தை வருகை தருகின்றனர்.

மைனாவுக்கும் அவரது கணவருக்கும் பிக்பாஸ் வைத்த டாஸ்க். சொதப்பிய தம்பதிகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் சென்டிமென்டாக இருக்கும் என்பதை முதல் புரமோவில் இருந்து பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வீடியோ வெளியாகி இருக்கும்

ஒரே நாளில் ரிலீஸாகும் 4 நாயகிகளின் படம்: சன்னிலியோனை வீழ்த்துவாரா த்ரிஷா?

வரும் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 30-ஆம் தேதி நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நான்கு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.