தளபதி விஜய்யின் 'வாரிசு': சென்சார் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’: திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ‘வாரிசு’: படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு’ சான்றிதழ் கொடுத்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் சமூக வலைத்தளபக்கத்தில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து ‘வாரிசு’: திரைப்படத்தின் டிரைலரை எதிர்நோக்கி விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாரிசு’: திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் டிரைலர் வெளியாக உள்ளதால், இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அஜித் கேரக்டர் பெயர் கடைசி வரை தெரியாதா? எச் வினோத் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வைகுண்ட ஏகாதேசி அன்று இயற்கை எய்திய அஜித் பட நடிகரின் தந்தை: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

 பிரபல பத்திரிகையாளரும் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் நடித்தவருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை நேற்று வைகுண்ட ஏகாதேசி தினத்தில் இயற்கை எய்தியதை அடுத்த

ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையா? வைரல் புகைப்படங்கள்!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.1000 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனை என தெரியவந்துள்ளது. 

விஜய்சேதுபதி - கெளதம் மேனன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'என்னை படிச்சா பாஸ் ஆக மாட்ட..' கவர்ச்சி லுக்கில் அறிவுரை கூறிய நடிகை!

 பிரபல கவர்ச்சி நடிகை 'என்னை படித்தால் உனக்கு பட்டம் கிடைக்காது' என்ற அறிவுரையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.