'சர்கார்' விஜய் கெட்டப்பை லீக் செய்த வரலட்சுமி

  • IndiaGlitz, [Tuesday,July 10 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த சர்ச்சை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னொரு புறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே நடிகை வரலட்சுமி, விஜய்யை ஒரு புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் காதில் கடுக்கனும் கையில் குடையுடனும் உள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து வரலட்சுமி கூறியபோது, 'தளபதியின் இந்த புகைப்படத்தை அனுமதி வாங்கிதான் வெளியிடுகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த புதிய கெட்டப் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.