close
Choose your channels

பாலாவின் 'வர்மா' படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்

Thursday, December 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாருக்கும் சென்று வந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. இதே நிறுவனம் தான் ராஜீவ் மேனனின் 'சர்வம் தாளமயம்' ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக மேகா செளத்ரி என்ற கொல்கத்தாவை சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'காலா' புகழ் ஈஸ்வரிராவ், பிக்பாஸ் புகழ் ரைசாவில்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.