close
Choose your channels

7 வருடத்திற்கு முன்பே தமிழ் படத்தில் நடித்த வருண் சக்கரவர்த்தி: எந்த படம் தெரியுமா?

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஏழு வருடத்திற்கு முன்பே தமிழ் திரைப்படத்தில் நடித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு கிரிக்கெட் சம்பந்தமான கதையம்சம் கொண்ட திரைப்படமான ’ஜீவா’ வெளியானது என்பதும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த தனது மலரும் நினைவுகளை ஜீவா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வருண் சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில், ‘ஜீவா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அது ஒரு சந்தோஷமான காலம்’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த படத்தில் வருண் சக்கரவர்த்தியின் காட்சிகளின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.