நாளை முதல் வெளியாகும் ஆர்யாவின் குவார்ட்டர் டீஸர்

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றி படத்தை அடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ்-ஆர்யா இணைந்த அடுத்த படமான 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் முதல் டீஸர் நாளை வெளியாகிறது.

VSOP என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திரைப்படம் ஆர்யாவின் குவார்ட்டர் சென்சுரி படமாகும். அதாவது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, தமன்னா, சந்தானம், 'தாமிரபரணி' பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், ரேணுகா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

எம்.ராஜேஷின் மற்ற படங்களை போலவே ரொமான்ஸ் மற்றும் காமெடி கலக்கலில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஓளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை ஆர்யா மற்றும் பிவிபி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

கமலுடன் நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமை அடைவார். ஆனந்த் மகாதேவன்

கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல், கவுதமி, ஆஷா சரத் ஆகியோர்களுக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஆனந்த் மகாதேவன்......

ரஜினி, அஜித் இருவரையும் முந்திய விஜய்

இப்போதெல்லாம் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் டீசரை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தே அளக்கப்படுகிறது...

பார்த்திபனுடன் இணைவாரா 'நேரம்' நிவின்பாலி?

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபல மலையாள மலையாள நடிகர் நிவின்பாலி, மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்...

சிம்புவின் 'வாலு' படத்திற்கு இடைக்கால தடை. நீதிமன்றம் உத்தரவு

மூன்று வருடங்களுக்கு பின்னர் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட 'வாலு' திரைப்படத்திற்கு இடைக்கால...

உலகம் முழுவதும் 16 மொழிகளில் ரிலீஸ் ஆகும் சிம்பு படம்?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்...