'வீர தீர சூரன்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்.. சியான் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், திடீரென டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக காலை 9 மணிக்கான காட்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வீர தீர சூரன்’ படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட பி4யூ நிறுவனத்திற்கு ₹7 கோடி வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமம் விற்கும் முன்பு, படம் வெளியிட முன் வந்தால் 48 மணி நேரத்திற்குள் இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி, ‘வீர தீர சூரன்’ படத்திற்கான தடை நீக்கப்பட்டுவிட்டதாகவும், இதையடுத்து இன்று மாலை முதல் காட்சி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில்‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சியான் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலை இந்த படத்தின் முதல் காட்சி வெளியாகும் நிலையில், இதற்கான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
#VeeraDheeraSooran in theatres from today evening . 🔥 god bless
— G.V.Prakash Kumar (@gvprakash) March 27, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com