'விஐபி 3', 'விஐபி 4' படங்கள் குறித்து தனுஷ்

  • IndiaGlitz, [Sunday,July 09 2017]

'விஐபி' படத்தின் முதல் பாகத்தின் கேரக்டர்கள் தமிழக, ஆந்திர மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதால் அந்த கேரக்டர்களை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் முதல்பாகத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தின் கதை எழுதுவதில் ஒரு சவால் ஏற்பட்டது.
இந்த நிலையில் 'கொடி' படத்தின் படப்பிடிப்பின்போது 'விஐபி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஒரு ஸ்பார்க் கிடைத்ததால் இன்று உங்கள் முன்னாள் இந்த படம் உள்ளது. இந்த படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளர் தாணு அவ்ர்களுக்கு எனது நன்றிகள். அவர் இல்லாமல் இந்த படம் உருவாக வாய்ப்பே இல்லை.
கஜோல் மேடம் 20 ஆண்டுகள் கழித்து விஐபி மூலம் மீண்டும் தமிழுக்கு வந்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். மேலும் விஐபி 3 மற்றும் 'விஐபி 4' படங்களை படமாக்கும் ஐடியா உள்ளது. 'விஐபி 3' படத்தில் கஜோல் கண்டிப்பாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் 'விஐபி 3' படத்தில் அவர்கள் நடந்து கொள்வதை பொறுத்துதான் அவர்களை 'விஐபி 4' படத்திற்கு உயிருடன் வைத்திருப்பதா அல்லது கொன்று விடுவதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.
தனுஷின் இந்த பேச்சில் இருந்து விஐபி 3, மற்றும் 'விஐபி 4' ஆகிய படங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம்

More News

கமல் மகளை சாடினாரா பிரபு சாலமன்?

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் தற்போது 'கும்கி 2' படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிம்புவை கெட்டவனாக்கும் எண்ணமில்லை. டி.ராஜேந்தர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

விஜய்யின் 'மெர்சல்' படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் முதல் பாதியின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜூலை 14-ல் குவியும் புதிய படங்கள் ரிலீஸ்

கடந்த திங்கள் முதல் வியாழன் வரை திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் நேற்றைய வெள்ளியன்று புதிய படங்கள் வெளியாகவில்லை.

சென்னையில் மோனோ ரயில் இயக்க தமிழக அரசு திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ ரயில் வசதியில்லாத இடங்களில் மோனோ ரயில் தடம் செயல்படும் என தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.