close
Choose your channels

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் அனைத்து தமிழக ரிலீஸ் உரிமைகளும் விற்பனையாகி தற்போது தியேட்டர் புக்கிங் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்

அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே 'கருத்தவனெல்லாம் கலீஜாம் மற்றும் இறைவா+உயிரே ஆகிய பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ஆகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.