close
Choose your channels

வேலைக்காரன் படத்தில் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் படக்குழு

Thursday, November 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகைச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பேராதரவு பெற்று கொண்டாடப்படும். சிவகார்த்திகேயன் , நயன்தாரா , பகத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலைக்காரன் ' படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை '24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கின்றார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் , ரூபனின் படத்தொகுப்பில் , முத்துராஜின் கலை இயக்கத்தில், அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் 'இறைவா' சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி மேலும் பலமாக கலக்கிக்கொண்டு வருகிறது இப்பாடல் என்பதே தற்போதய செய்தி. வெகு சில பாடல்களே இந்த சாதனையை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றது. ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்ததை 'வேலைக்காரன் '  படக்குழுவினர்  நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாட உள்ளனர்.  

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.