close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' சென்சார் தகவல்கள்

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமான சிவகார்த்திகேயன் படங்கள் போலவே இந்த படமும் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த தகவலை இயக்குனர் மோகன் ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். யூ சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து படக்குழுவினர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.