close
Choose your channels

சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் 'வேலைக்காரன் டீசர் ரிலீஸ் தேதி

Saturday, August 12, 2017 • தமிழ் Comments

குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட சிவகார்த்திகேயனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முதன்முதலில் இணைந்து நடித்த 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த டீசர் வரும் திங்கள் அன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமும் உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். அனிருத் இசையமப்பில் ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz