close
Choose your channels

'வேலைக்காரன்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, August 19, 2017 • தமிழ் Comments

கடந்த சில நாட்களகவே தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ், அஜித்தின் 'விவேகம்' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆகியவை இணையதளங்களையும் சமூக இணையதளங்களையும் ஆக்கிரமித்து கொண்டது. இதனிடையே தற்போது இந்த பரபரப்பில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

ஆம், சற்றுமுன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை இந்த படத்தின் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் அறிவித்துள்ளார்.

இதன்படி 'வேலைக்காரன்' சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அனிருத் அறிவித்துள்ளார். அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த நாள் உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz