ரிலீசுக்கு முன்பே 'வேலைக்காரன்' படத்தை பார்த்து பாராட்டிய அதிகாரிகள்

  • IndiaGlitz, [Tuesday,December 12 2017]

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர்களை தவிர அந்த படத்தை பார்ப்பது சென்சார் அதிகாரிகள் மட்டுமே. பொதுவாக சென்சார் அதிகாரிகள் தங்கள் கடமையின் பொருப்பு கருதி படத்தை விமர்சனம் செய்வதோ, படம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதோ கிடையாது. ஒரு அதிகாரியாகத்தான் படத்தை பார்ப்பார்கள்

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தையும் பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்தது தெரிந்ததே. இந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வலுவான சமூக கருத்துகளுக்காக படக்குழுவினர்களை பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாராட்டு படக்குழுவினர்களை உற்சாகமடைய செய்திருப்பதாகவும், சென்சார் அதிகாரிகளுக்கு பிடித்தது போலவே நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், நடுநிலை ஆடியன்ஸ்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவுசல்யா தந்தை உள்பட 4 பேர்களுக்கு தூக்குதண்டனை: முழுவிபரம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவருடைய அரசியல் பார்வையும்...

இன்றைய தமிழகம் ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. ஆளுமை அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவும்,....

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உள்பட 11 பேர் குற்றவாளி. பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளி

செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட பிரபல காமெடி நடிகர்

தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய்சாய் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தகவல் பரிமாற்றங்களுக்காக சரத்குமார் வெளியிட்ட செயலி

சமீபத்தில் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் தங்களுடைய செயலிகளை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் அவர்களும் ASK என்னும் செயலியை வெளியிட்டுள்ளார்