பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர் மோகன் என்பவர் தனது 2 பேரக் குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து 2 மகன்களையும் விபத்தில் இழந்துவிட்ட தாய் (வித்யா 34) இன்றுகாலை ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தவர் மோகன்(60). இந்தக் கடைக்கு கடந்த 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு 2 பேர் பட்டாசு வாங்க வந்துள்ளனர். வந்தவர்கள் பட்டாசு எப்படி வெடிக்கிறது என்பதை சோதனை செய்து பார்க்க விரும்புவதாகத் தெரிவித்து உள்ளனர். இதனால் கடையின் உரிமையாளர் மோகனும் அவர்களுக்கு சில பட்டாசுகளைக் கொடுத்து உள்ளார். இந்தப் பட்டாசுகளைப் பெற்றுக் கொண்ட அந்த வாடிக்கையாளர்கள் இருவரும் கடைக்கு முன்பே பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் பட்டாசில் இருந்து சிதறிய தீ, பட்டாசு கடையின் மீது பட்டு இருக்கிறது. இதையடுத்து கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் சிறிது நேரத்திலேயே வெடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதைப்பார்த்த மோகன் கடைக்கு உள்ளே இருந்த தனது பேரக்குழந்தைகளைக் காப்பாற்ற கடைக்குள் சென்றார். ஆனால் தீ மளமளவென பற்றியதால் கடையில் இருந்த அனைத்துப் பட்டாசுகளும் வெடித்து கடை உரிமையாளர் மோகன், அவரது பேரக்குழந்தைகள் தனுஷ் (8), தேஜஸ் (7) ஆகிய மூவரும் உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து குழந்தைகளைப் பறிக்கொடுத்த தாய் வித்யா கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரே நேரத்தில் தனது தந்தை மற்றும் குழந்தைகளை இழந்த அவர் விரக்தியில் இன்று காலை ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் வேலூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தாய் வித்யா கணவரை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

More News

நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய நித்தியானந்தா… இந்தியர்களுக்குமா இந்த அவலம்?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது

தல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா

ஒரு படுக்கைக்கு 50 நோயாளிகள் வரிசைக்கட்டி நிற்கும் அவலம்… என்ன நடக்கிறது உ.பி.யில்?

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் பல வட மாநிலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் மத்திய அரசு செய்த காரியம்...! அதிருப்தி அடைந்த தமிழக அரசு...!

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழக அரசின் உத்தரவு இல்லாமலே, மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு இதை அனுப்பிவருகிறது

இதுதான் வாழ்க்கை? பிரபல பாலிவுட் நடிகை கூறிய கருத்தால் வைரலான பதிவு!

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறி பின்னர் ஹாலிவுட்டிலும் முத்திரைப் பதித்தவர் நடிகை தீபிகா படுகோன்.