close
Choose your channels

சிம்புவுடன் சேர்ந்து டாக்டர் பட்டம் வாங்குபவர்கள் யார் யார் தெரியுமா?

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது என்பதும் இந்த டாக்டர் பட்டத்துக்கான விழா நாளை அதாவது ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்புவுடன் சேர்ந்து இன்னும் இருவர் டாக்டர் பட்டம் பெற இருக்கின்றனர்.

நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் கூறியபோது, ‘6 மாத குழந்தையிலிருந்து திரையுலகில் நடிக்க வந்து தற்போது 39 வயது வரை அவர் நடித்து வருகிறார் என்பதும், நடிப்பு மட்டுமின்றி இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் அவர் ஜொலித்து வருகிறார் என்றும் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கும் நிலையில் அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் டாக்டர் பட்டம் பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் என்பதும் இன்னொரு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாரியப்பன் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.