வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்கப்போகும் பிரபலம் இவர்தான்!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’திருட்டுப் பயலே’ ’திருட்டு பயலே 2’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசி கணேசன்

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சுசி கணேசன் தான் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் ’வஞ்சம் தீர்த்தாயடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட அந்தப்படம் 1980களில் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்றும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் பிரதமர் மோடி அவர்கள் தமிழில் டுவிட் செய்து வேலுநாச்சியாரின் வீரம் குறித்து குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை சுசிகணேசன் இயக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வேலுநாச்சியார் கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வீரத் தமிழச்சியின் வீரத்தை இன்றைய தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்க விரும்புவதாக சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.

More News

பிறந்த நாளில் வெளியான அடுத்த பட டைட்டில்: ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் என்பது தெரிந்ததே

மனைவி, மகன்களை கொலை செய்து தற்கொலை செய்த சென்னை வங்கி அதிகாரி: ஆன்லைன் ரம்மியால் விபரீதம்

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீரோவாக தயாராகி வருகிறாரா சமுத்திரகனி மகன்? வைரல் புகைப்படம்!

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் ஹீரோவாக தயாராகி வருவது போன்று அந்த புகைப்படம்

'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலை தனது பாணியில் பாடும் 'குக் வித் கோமாளி' சுனிதா!

'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' என்ற பாடலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சுனிதா தனது பாணியில் பாடிய வீடியோ தற்போது வைரல்

'ஆர்.ஆர்.ஆர்' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் நடிகர் பரத்தின் டுவின்ஸ்! வைரல் வீடியோ

'ஆர்.ஆர்.ஆர்' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் நடிகர் பரத்தின் டுவின்ஸ்! வைரல் வீடியோ