close
Choose your channels

விஜய் நாயகியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

Friday, December 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா, நடித்த 'உப்புக்கருவாடு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'அஞ்சல' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விமல், நந்திதா ஸ்வேதா, பசுபதி, இமான் அண்ணாச்சி, ரித்விகா, ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ள 'அஞ்சல' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்கள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தங்கம் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோபிசந்தர் இசையமைத்துள்ளார். ரவிகண்ணன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார். இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.