close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரபல நடிகருடன் அடுத்த படம்!

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் சுமார் ரூ.60 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி விட்டன. 

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இத்னானி நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இவருக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது .

இந்த நிலையில் தற்போது சிம்புவின் படத்தை அடுத்து தனுஷ் படத்தில் நடிக்க சித்தி இத்னானிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் சித்தி இத்னானி தான் ஹீரோயின் என்றும் இந்த படத்தை எலான் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.