close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் சிம்புவின் ஒரு சில கெட்டப் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது என்பதும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஐந்து கெட்டப்புகளில் நடித்து இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் ஸ்டைலாக சிம்பு உட்கார்ந்து இருக்கும் இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வசனத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் சிம்பு ஜோடியாக குஜராத் நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.