close
Choose your channels

சிம்பு, கெளதம் மேனனை அடுத்து கூல் சுரேஷூக்கும் கிஃப்ட் கொடுத்த ஐசரி கணேஷ்!

Tuesday, September 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சிம்புவுக்கு சொகுசு காரும் கௌதம் மேனனுக்கு இருசக்கர வாகனமும் பரிசு கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது கூல் சுரேஷூக்கும் கிப்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை 60 கோடிக்கு மேல் வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை அடுத்து சிம்புவுக்கு ஆடம்பர கார் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசளித்தார். இந்த காரின் மதிப்பு ஒரு கோடி என்று கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை பிரமாதமாக புரமோஷன் செய்தவர் கூல் சுரேஷ் என்று சிம்புவே பாராட்டினார் என்பதும், அது மட்டுமின்றி தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை புரமோஷன் செய்த கூல் சுரேஷூக்கு ஐபோன் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.