close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்!

Friday, May 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்கு ரிலீஸுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸாவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின்னர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்திற்காக அமேசான் மிகப்பெரிய தொகையை கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.