திலீப் சுப்பராயனுடன் இணையும் 'சென்னை 600028' சகோதரர்கள்

  • IndiaGlitz, [Friday,April 22 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், 'சங்குச்சக்கரம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

'திலீப் சுப்பராயன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் 'பசங்க' புகழ் நிஷேஷ் உள்பட 10 குழந்தை நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று இரவு 8 மணிக்கு 'சென்னை 600028' சகோதரர்கள் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகின்றனர்.

பிரபல இயக்குனர் பி.வாசுவின் உதவியாளர் மாரீசன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கண்ணன் ஒளிப்பதிவும், விஜய்வேலுக்குட்டி படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராகவும் திலீப் சுப்பராயன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.100 கோடி கிளப்பில் சாதனையுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன 'தெறி' திரைப்படத்தின் தமிழக வசூல் ஒரே வாரத்தில் ரூ.47 கோடி ஆனது என்பதை நேற்று பார்த்தோம்...

சிம்புவுக்கு கவுதம் மேனன் கொடுத்த ரோல் என்ன?

சமீபத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் ....

ஸ்ருதிஹாசன் என்னை விட மேல். கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே பணிவானவர்தான். ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்துள்ள விக்ரம்பிரபு அவரைவிட பணிவானவர் ....

சிம்புவை வெளியேற விடமாட்டேன் - நாசர்

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து நேற்று வந்த செய்தி குறித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியபோது, 'சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக ஊடகங்களில் ....

சசிகுமாரின் வெற்றிவேலுடன் இணையும் சமுத்திரக்கனி

சசிகுமார், மியா ஜார்ஜ் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும்...