'கபாலி'க்காக விடுமுறை அறிவித்த முன்னணி இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,July 19 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரையிலும், டெக்னீஷியன் லெவலில் இயக்குனர்கள் முதல் லைட்பாய்கள் வரையிலும் ரசிகர்கள் உள்ளனர். வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள 'கபாலி' படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்களை போலவே கோலிவுட் பிரபலங்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தனது தயாரிப்பு நிறுவனம் 'பிளாக் டிக்கெட்' நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வரும் 23ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துள்ளார். தலைவர் ரஜினியின் 'கபாலி' படத்தை முதல் நாளில் பார்க்கும் வசதிக்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
ரஜினியின் தீவிர ரசிகர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர் என்பது தெரிந்ததே. எனவே அவர் 'கபாலி' ரிலீஸ் தினத்தில் வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிப்பில் எந்தவித வியப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதியை இணைத்த கே.எஸ்.ரவிகுமார்

கோலிவுட் திரையுலகின் சீனியர் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தற்போது 'முடிஞ்சா இவனப் புடி' என்ற படத்தை இயக்கியுள்ளார்..

'கபாலி'யுடன் இணைந்த 'தனி ஒருவன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ஜூரம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பரவியுள்ள நிலையில்...

கபாலி: ஹவாய் தீவில் ரிலீஸ் ஆகும் முதல் தென்னிந்திய படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ஒவ்வொரு திரையரங்காக செய்யப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு திரையரங்கிலும் முன்பதிவு ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் முதல் மூன்று நாட்களுக்குரிய காட்சிகளின் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்து வருகிறது...

அக்சய்குமார் படத்தை ரீமேக் செய்வாரா உதயநிதி?

பாலிவுட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் 'ஜாலி LLB. இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் 'மனிதன்'...

மோகன்லால் நடித்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது...