'மாநாடு' படத்தை மோசம் என கூறியவருக்கு வெங்கட்பிரபு கூறிய பதில்!

சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் டைம் லூப் டெக்னிக் பயன்படுத்தப்பட்டது என்பதும் பாமரருக்கும் புரியும் வகையில் மிகவும் தெளிவாக எடுக்கப்பட்டு இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என அனைத்து விமர்சனங்களும் கூறி இருந்தன.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக ‘மாநாடு’ படத்தை விமர்சனம் செய்து ரசிகர் ஒருவர் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், ‘‘மாநாடு’ படத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருகிறது என்றும் நான் பார்த்த படங்களில் மோசமான படம் ‘மாநாடு’ படம் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இது டைம்லூப் படம் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை என்றும் அப்பாவியாக கூறியிருந்தார்.

இது குறித்த வீடியோவை பிரேம்ஜி பகிர்ந்து உள்ள நிலையில் இதற்கு வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ’அனைத்து விமர்சனங்களையும் நாம் நேர்மறையாக எடுத்துக்கொள்வோம் என்றும், அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்’ என்று கூறிய வெங்கட்பிரபு ’நாம பார்க்காத விமர்சனங்களா’ என்று தெரிவித்துள்ளார்

மேலும் ’அடுத்த படம் இவருக்கும் பிடிக்கிற மாதிரி, புரியிற மாதிரி எடுக்க ட்ரை பண்ணுவோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபுவின் இந்த டீசன்டான பதில் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

ஜனவரி 26 முதல் ஆரம்பம்: கமல்ஹாசன் அறிவிப்பு

ஜனவரி 26 முதல் தனது புதிய பிசினசை தொடங்க இருப்பதாக உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்: பிரேம்ஜியின் முதல் கமெண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில்

துணை நடிகர் முதல் மாஸ் நடிகர் வரை: விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி துணை நடிகராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக மாறியுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில்

'புஷ்பா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட யாஷிகா ஆனந்த: வைரல் வீடியோ

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தின் பாடல் ஒன்றுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மும்பையில் போனிகபூரை சந்தித்த அஜித்: வைரல் புகைப்படம்!

மும்பையில் உள்ள போனி கபூரின் அலுவலகத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.