திரையுலகில் அறிமுகமாகும் வெங்கட் பிரபு மகள்.. எந்த படத்தில்?

  • IndiaGlitz, [Friday,April 07 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவின் மகள் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இசைஞானி இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தற்போது திரையுலகில் ஜொலித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் திரையுலகில் உள்ளனர். அந்த வகையில் வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள ’கஸ்டடி’ என்ற திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் மகள் அறிமுகமாகிறார்.


’கஸ்டடி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி ஒரு பாடலை எழுதியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி ஏற்கனவே 5 வயதாக இருக்கும் போது ’தாய்’ என்ற ஆல்பத்தில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கஸ்டடி’ திரைப்படம் மூலம் பாடலாசிரியராக வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி எழுதிய பாடல் வரும் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வரிகள் காவல் துறையை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. கொண்டாட்ட்டம் மற்றும் துள்ளலான டான்ஸ் பாடலுக்கு ஷிவானி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இளம் வயதில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

More News

எதிர்பாராத திருப்பம்.. நயன்தாராவின் 75 வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஃபாலோ செய்யும் பணக்காரர்களுக்கு அரைநிர்வாண புகைப்படம்.. இன்ஸ்டா பிரபலம் கைது..!

இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்யும் பணக்காரர்களுக்கு அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த மாடல் அழகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'கனவுல அவன் வந்து எது சொன்னாலும் அப்படியே நடக்குது': விமலின் 'தெய்வ மச்சான்' டிரைலர்..!

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த 'தெய்வமச்சான்' என்ற திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய

புலியே இரண்டடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. 'புஷ்பா 2' டிரைலர்..

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவான 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.350 கோடிக்கு அதிகமாக உலகம்

கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற மைனா நந்தினி .. கலர்ஃபுல் புகைப்படங்கள்..!

விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினி தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.