இணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்!

  • IndiaGlitz, [Friday,October 30 2020]


இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி, தற்போது ஒரு பிரபல இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு இசை மாணவியாக இணைந்துள்ள அவர் பாடிய பாடல்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஐந்து வயதிலேயே ‘தாலி’ என்ற ஆல்பத்தில் பாடியதன் மூலம் தான் ஒரு இசை பாரம்பரியத்தில் பிறந்தவர் என்பதை நிரூபித்த ஷிவானி, இசைமேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக தற்போது இசைப்பள்ளியின் மாணவியாகியுள்ளார். ஷிவானியும் அவரது சக இசை மாணவ மாணவிகளும் இணைந்து பாடிய Lazarus என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த Lazarus பாடலை தங்கள் பாணியில் ஷிவானி உள்ளிட்ட மாணவ மாணவிகள் இசையமைத்து பாடிய இந்த பாடலுக்கு இசை ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஷிவானி குழுவினர்கள் தனியாக ஒரு பாடலை எழுதி கம்போஸ் செய்து பாடியுள்ளனர் என்பதும் அந்த பாடலும் இசை ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானியின் இசைக்குடும்பத்தில் இருந்து இன்னொரு இசைக்கலைஞர் உருவாகியுள்ளதற்கு நமது உளங்கனிந்த பாராட்டுக்கள்

 

More News

கப்பலையே தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியக் கடற்படையின் புது அசத்தல்!!!

வங்கக் கடல் பகுதியில் கப்பலைத் தாக்கி அழிக்கும் புது ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது.

வியட்நாமை சூறையாடிய சூறாவளி… 100 க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!!!

வியட்நாமில் கனமழைக்கு நடுவே “மோலேவே” எனும் சூறாவளி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை ரசிகர்களுக்கு பிடித்த கெய்க்வாட்: ரஜினி-ருத்ராஜை ஒப்பிட்ட பிரபலம்!

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களாக அமைதியாக இருந்த ஷிவானி, தனக்கு மிங்கிள் ஆவதற்கு கொஞ்சம் டைம் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார்