'வலிமை' அப்டேட், 'மாநாடு' அப்டேட்: டபுள் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

’வலிமை’ அப்டேட் மற்றும் ‘மாநாடு’ அப்டேட் என இரண்டு அப்டேட்களின் தகவல்களை வெங்கட்பிரபு கூறியதை அடுத்து அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர். 

அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. அதேபோல் ‘மாநாடு’ படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் ’வலிமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா தயார் செய்து விட்டதாகவும் விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்றும் தெரிவித்தார். அதேபோல ‘மாநாடு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் ’வலிமை’ மற்றும் ‘மாநாடு’ படங்களின் அப்டேட்களை கொடுத்த வெங்கட்பிரபுவை அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.