வெங்கட்பிரபுவின் 'கஸ்டடி' : சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவான ‘கஸ்டடி’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான நாகசைதன்யா மற்றும் ‘சென்னை 28’ பட குழுவினர்களுடன் சந்திப்பு குறித்த புரமோஷன் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘கஸ்டடி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்

மேலும் இந்த படம் 147 நிமிடங்கள் 57 வினாடிகள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் சுமார் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ரன்னிங் டைமாக உள்ளது என்பதும் ஒரு சரியான பொழுதுபோக்கு படத்திற்கான ரன்னிங் டைம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ள இந்த படம் வரும் மே 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் சிம்பு? மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

காதலி என்பவர் எப்போதும் காதலி தான், ப்ரெண்ட் என சொல்வது போங்காட்டம்: 'தீராக்காதல்' டிரைலர்..!

ஜெய் நடிப்பில் உருவான 'தீராக்காதல்' என்ற திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 

வேறலெவலா மாறப்போகும் டிவிட்டர் கணக்கு? கட்டணம் இருக்குமா?

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதன் சேவையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன.

3 DNA களுடன் பிறந்த அதிசய குழந்தை… இதுவும் சாத்தியமா?

பிறக்கும் குழந்தைகள் பொதுவாக தாய், தந்தை இருவரின் மரபணுவைக் கொண்டு பிறக்கும். ஆனால் 3 மரபணுக்களைக் கொண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்- பெள்ளியை சந்தித்த தோனி… என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் வி